கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நடிகரும் அரசியல்வாதிகமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழகத்தையே இருளில் மூழ்க செய்தது. அவர் மறைந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையிலும் ரசிகர்களும் தொண்டர்களும் இன்னும் மீள முடியா துயரத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இன்று (டிசம்பர் 28) கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள், தேமுதிக கட்சியினர் சார்பில் குருபூஜையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு விஜய் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விஜயகாந்தின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செய்து வருகின்றனர்.
அப்போது திடீரென்று வானில் கழுகு ஒன்று தோன்றியது. இதைக் கண்ட ரசிகர்களும் தொண்டர்களும் புல்லரித்து போயினர். ஏற்கனவே கடந்த ஆண்டு விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் போது இதேபோல் கழுகு ஒன்று வானில் வட்டமடித்துக் கொண்டே இருந்தது. எனவே ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கழுகு விஜயகாந்தின் நினைவிடத்தை வட்டமடிப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
- Advertisement -