Homeசெய்திகள்சினிமாகேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் 'படை தலைவன்'.... முக்கிய அறிவிப்பு!

கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’…. முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் படை தலைவன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கேப்டன் மகன் சண்முக பாண்டியன் , 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மதுரவீரன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் 'படை தலைவன்'.... முக்கிய அறிவிப்பு! அந்த வகையில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்திற்கு படை தலைவன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வால்டர் படத்தை இயக்கியிருந்த U அன்பு எழுதி இயக்குகிறார். இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து கஸ்தூரிராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை வி ஜே கம்பைன்ஸ் நிறுவன மும் சுமீத் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இளையராஜா இதற்கு இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர். கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் 'படை தலைவன்'.... முக்கிய அறிவிப்பு!இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். ஆகவே இது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பாக கூட இருக்கலாம் என்று அறிவிப்பாக கூட இருக்கலாம் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ