spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகாதலித்து திருமணம் செய்துகொண்ட செலிப்ரிட்டி கப்பிள்ஸ்

காதலித்து திருமணம் செய்துகொண்ட செலிப்ரிட்டி கப்பிள்ஸ்

-

- Advertisement -

பிரபலங்களின் திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு தனி எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதுவும் அவர்கள் திரையில் பார்த்து ரசித்த மிகவும் பிடித்த நடிகர்கள், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொண்டால் சொல்லவா வேண்டும்? அந்த வகையில், இன்று காதலர் தினத்தையொட்டி இதுவரை தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட செலிப்ரிட்டி கப்பிள்ஸ்.

ரஜினிகாந்த் -லதா:

we-r-hiring

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது Celebrity Couples மனைவி லதாவை காதலித்துத் தான் திருமணம் செய்துகொண்டார். கடந்த 1981ஆம் ஆண்டு திருப்பதியில் மணம் முடித்துக்கொண்ட இந்த தம்பதி, 42 ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக இணைந்தே கடந்திருக்கிறனர். என்னதான் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், ஒரு காலத்தில் மது, மாது என்றிருந்த தன்னை முழுவதும் மாற்றியவர் லதா தான் என இன்றளவிலும் ரஜினிகாந்த் தன் மனைவியை பாராட்டுவதுண்டு.

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமி:

மக்களிசை பாடல்களால் உலக தமிழர்களை ஈா்த்த தம்பதி என்றால் அது புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமி தம்பதி தான். பாலும் டிகாஷனும் போல இருந்தாலும் இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது எல்லோரையும் வியக்கச் செய்யும். அதுவும் கல்லூரிக் காதல். இசைக்கல்லூரியில் முதுகலைப் பட்டம் படித்துக்கொண்டிருக்கும்போதே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பல சுவாரஸ்யங்கள் கொண்ட இந்த காதல் இணையரின் திருமணம் 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி வேதாரண்யத்தில் நடந்தது. ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றளவிலும் ஐடியல் கப்பிளாக இருந்து வருகின்றனர்.

குஷ்பு – சுந்தர்.சி:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு, கடந்த 2000ம் ஆண்டு இயக்குநர் சுந்தர். சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுந்தர். சி இயக்குனராக அறிமுகமான ‘முறை மாமன்’ படத்தில் குஷ்பு கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பின்னரே அவர்களுக்கு காதல் மலர்ந்தது. இந்த தம்பதியினருக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.

அஜித் – ஷாலினி:

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளங்களை குவித்து வைத்திருக்கும் நடிகரென்றால் அஜித்தை சொல்லலாம். அஜித்தும், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக கலக்கிய ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அமர்க்களம் படப்பிடிப்பின் போது காதல் வயப்பட்டு இருவரும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

சூர்யா – ஜோதிகா:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா – நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். நீண்ட நாள் காதலுக்குப் பின்னர் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் . இவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். அண்மையில் தங்களது திருமண நாளை முன்னிட்டு தான் வரைந்த ஓவியத்தை சூர்யாவுக்குப் பரிசாக வழங்கியிருந்தார் ஜோதிகா.

சினேகா – பிரசன்னா:

2009 ஆம் ஆண்டு வெளியான ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்கிற படத்தில் சினேகாவும், பிரசன்னாவும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சினேகா- பிரசன்னா இருவரும் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ஆர்யா – சாயிஷா:

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயான ஆர்யாவும், சாயிஷாவும் ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். சாயிஷா ஒரு சில படங்களே நடித்திருந்தாலும், நேர்த்தியான நடிப்பாலும், அசத்தலான நடனத்தாலும் அதிக ரசிகர்களை கவர்ந்திருந்தவர். இருவரும் இணைந்து நடித்த முதல் படத்திலேயே காதல் மலர்ந்ததை அடுத்து, கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ஆதி – நிக்கி கல்ராணி:

2017ம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர் ஆதியும், நிக்கியும். சில ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு (2022) தான் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா:

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும். விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. எப்போ கல்யாணம்? எப்போ கல்யாணம்? என எங்கு பார்த்தாலும் கேள்விகள் ஈட்டியாய் பாய, ஒரு வழியாக லிவிங் டு கெதருக்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இந்த இணைக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்:

‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக நடித்து பின் காதலில் விழுந்த ஜோடி தான் கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடி. கொஞ்சம் காலம் காதல் ஜோடிகளாக வலம் வந்த இவர்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் கரம்கோர்த்தனர்.

MUST READ