Homeசெய்திகள்சினிமாலெஜெண்ட் சரவணனின் புதிய படத்தில் இணைந்த பிரபலங்கள்!

லெஜெண்ட் சரவணனின் புதிய படத்தில் இணைந்த பிரபலங்கள்!

-

- Advertisement -

லெஜெண்ட் சரவணனின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.லெஜெண்ட் சரவணனின் புதிய படத்தில் இணைந்த பிரபலங்கள்!

லெஜெண்ட் சரவணன் ஆரம்பத்தில் தனது தொழில் ரீதியான விளம்பர தொடர்களில் நடிக்க தொடங்கியவர். அதன் பின்னர் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தினை ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தார். இந்த படம் உருவான விதம் நன்றாக இருந்தாலும் படமானதை எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அடுத்ததாக லெஜண்ட் சரவணன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தினை காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். திரில்லர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் புதிய லுக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தூத்துக்குடியில் நடைபெற இருக்கிறது. லெஜெண்ட் சரவணனின் புதிய படத்தில் இணைந்த பிரபலங்கள்!இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய அப்டேட்டுகள் வெளிவந்துள்ளன. அதன்படி இந்த படத்தில் நடிகர் ஷியாம், ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படமானது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ