spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் 'சந்திரமுகி 2' ஃபர்ஸ்ட் சிங்கிள்!

கவனம் ஈர்க்கும் ‘சந்திரமுகி 2’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

-

- Advertisement -

சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி உள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இது கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தில் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ளது இதனை P.வாசு இயக்கியுள்ளார்.

we-r-hiring

இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கங்கணா ரனாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், வடிவேலு மகிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்பை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரமாண்டமான அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளது. படம் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட உள்ளது.

சமீபத்தில் படத்தின் வேட்டையன் ராஜா மற்றும் சந்திரமுகி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் ஸ்வாகதாஞ்சலி என்னும் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கங்கனா ரணாவத்தின் அழகிய நடனத்தில் உருவாக்கப்பட இந்த பாடலை சைதன்யா பிரசாத் எழுதியுள்ளார். ஸ்ரீநிதி திருமலா இதனை பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது கவனம் பெற்று வருகிறது.

MUST READ