Homeசெய்திகள்சினிமா'போட்' படத்தை கரை சேர்த்தாரா சிம்பு தேவன்?.... திரை விமர்சனம் இதோ!

‘போட்’ படத்தை கரை சேர்த்தாரா சிம்பு தேவன்?…. திரை விமர்சனம் இதோ!

-

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களின் மூலம் பிரபலமான சிம்பு தேவன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் தான் போட். இந்த படத்தில் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து கௌரி கிஷன், எம்.எஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மாலி அண்ட் மான்வி நிறுவனம் தயாரிக்க ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருக்கிறார்.'போட்' படத்தை கரை சேர்த்தாரா சிம்பு தேவன்?.... திரை விமர்சனம் இதோ!

போட் – BOAT என்பதன் விரிவாக்கம் Based On A True Story என்று டைட்டில் கார்ட் போட்டதிலேயே சிம்பு தேவனின் தனித்துவம் தெரிகிறது. அதாவது இந்த படத்தின் கதை 1943 ஆம் ஆண்டு மெட்ராஸ் பகுதியில் நடக்கிறது. இரண்டாம் உலகப்போர், சுதந்திரப் போராட்டம் என நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜப்பானிய விமானப்படையின் குண்டு வீச்சிற்கு பயந்து தனது பாட்டியுடன் யோகி பாபு (மீனவன்) கடலுக்குள் சென்றால் யாரும் குண்டு போட மாட்டார்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து படகில் எரிச்செல்ல திட்டமிடுகிறார். அப்போது அவர்களுடன் சிலரும் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் ஏறி பயணிக்கிறார்கள். அதேசமயம் ஒரு பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியும் நடுக்கடலில் அவருடன் அந்த படகு பயணத்தில் இணைகிறார். திடீரென அந்த படகில் ஓட்டை விழுகிறது. 'போட்' படத்தை கரை சேர்த்தாரா சிம்பு தேவன்?.... திரை விமர்சனம் இதோ!மேலும் பெரிய சுறா ஒன்று இவர்களை வட்டமிடுகிறது. இவ்வாறு அடுத்தடுத்த பிரச்சனைகள் வெடிக்க மனிதனின் சுயநலம் எப்படி வெளி வருகிறது. அது நிலத்தில் போடும் வெடிகுண்டை விட எவ்வளவு கொடூரமானது என்பதை எடுத்துரைத்துள்ளார் சிம்பு தேவன். படம் என்றாலே காதல் காட்சி, சண்டை காட்சி, வெட்டு, குத்து என்றில்லாமல் புதுமையான அனுபவத்தை இந்த போட் படம் தந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் சாதி, மதம், இன்றைய அரசியல் சூழலில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனை ஆகியவற்றை அரசியல் நையாண்டியுடன் இந்த படத்தில் கையாண்ட விதம் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. படத்தில் நடித்திருக்கும் கௌரி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோர் தங்களின் சரியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 'போட்' படத்தை கரை சேர்த்தாரா சிம்பு தேவன்?.... திரை விமர்சனம் இதோ!அடுத்ததாக ஜிப்ரானின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. அடுத்ததாக ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னுள்ள ஆழமான கதையும் அவர்களுக்கான வசனங்களுமே படத்தின் மற்றொரு பலமாக அமைந்துள்ளது. படம் முழுக்க கடலில் எடுக்கப்பட்டது படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறது. அதாவது படம் முழுக்க படகை சுற்றி நடப்பதனால் வசனங்கள் தான் ஹைலைட்டாக நிற்கின்றன. சில இடங்களில் சலிப்பை தந்தாலும் அனைவரும் தங்களின் நடிப்பினால் எப்படி படத்தை தாங்கி பிடித்துள்ளார்களோ அதுபோல சிம்பு தேவன் தனது திரைக்கதையினால் தன்னுடைய போட்டை கரை சேர்த்திருக்கிறார். ஆகையினால் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கும் திரைப்படம் தான் போட்.

MUST READ