spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசின்ன சின்ன கண்கள்... கோட் படத்திலிருந்து வெளியானது புரமோ...

சின்ன சின்ன கண்கள்… கோட் படத்திலிருந்து வெளியானது புரமோ…

-

- Advertisement -
kadalkanni
கோட் திரைப்படத்திலிருந்து நாளை வௌியாக இருக்கும் சின்ன சின்ன கண்கள் பாடலின் புரமோவை படக்குழு வௌியிட்டுள்ளது.

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், அஜ்மல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும்.

இந்த படத்தின் முதல் தோற்றம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திரையரங்குகளில் வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு மற்றும் டப்பிங் முடிந்துவிட்டது.

இந்நிலையில், நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் கடந்த ஒரு மாதமாக காத்திருக்கின்றன. அந்த வகையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே முதல் பாடல் வெளியான நிலையில், தற்போது சின்ன சின்ன கண்கள் எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது. இதன் புரமோ காணொலி தற்போது இணையத்தில் வௌியாகி இருக்கிறது. இப்பாடலை விஜய் பாடி இருக்கிறார். மேலும், மறைந்த இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணியின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

MUST READ