சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் மெகா 156 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் போலா சங்கர். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை இதை தொடர்ந்து சிரஞ்சீவி யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 156 ஆவது படத்தில் நடித்து வருகிறார். மெகா 156 படமாக உருவாகும் இந்த படத்தை பிம்பிசாரா பட இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பட குழுவினர் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.
Beyond the universe and beyond the celestial realms, comes a light of hope – 𝗩𝗜𝗦𝗛𝗪𝗔𝗠𝗕𝗛𝗔𝗥𝗔 💫#Mega156 is #Vishwambhara ❤️🔥
Title and concept video out now!
– https://t.co/BkWH5NqZ81In cinemas Sankranthi 2025.
MEGASTAR @KChiruTweets @DirVassishta @mmkeeravaani… pic.twitter.com/NFsXoM0If7
— UV Creations (@UV_Creations) January 15, 2024
அதன்படி மெகா 156 படத்திற்கு விஷ்வம்பரா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சோட்டா கே நாயுடு இதற்கு ஒளிப்பதிவு செய்ய எம் எம் கீரவாணி இசை அமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதன் மூலம் இப்படம் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடிய கதையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வீடியோவின் இறுதியில் இப்படம் 2025 சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.