Homeசெய்திகள்சினிமாசலார் படத்தை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்..... ஓடிடி ரிலீஸ் எப்போது?

சலார் படத்தை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்….. ஓடிடி ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

சலார் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.சலார் படத்தை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்..... ஓடிடி ரிலீஸ் எப்போது?

பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியான திரைப்படம் சலார். இந்த படத்தை கே ஜி எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இதில் பிரபாஸுடன் இணைந்து பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி, ஈஸ்வரி ராவ், பாபி சிம்ஹா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த வகையில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.சலார் படத்தை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்..... ஓடிடி ரிலீஸ் எப்போது?

இதைத்தொடர்ந்து சலார் 2 படமும் விரைவில் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு சலார் 2 – சௌர்யாகன பர்வம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சலார் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்தது. அதன்படி இப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ