spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சியான் 63' படத்தின் இயக்குனர் மாற்றம்?

‘சியான் 63’ படத்தின் இயக்குனர் மாற்றம்?

-

- Advertisement -

சியான் 63 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.'சியான் 63' படத்தின் இயக்குனர் மாற்றம்?

சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக வீர தீர சூரன் பாகம் 1 திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் சியான் விக்ரம் தனது 63வது படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என சொல்லப்பட்டது. அதேசமயம் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க சாய்பல்லவி, பிரியங்கா மோகன், மீனாட்சி செளத்ரி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. எனவே இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக சியான் 63 படத்திற்காக, நடிகர் விக்ரமுக்கு ரூ. 50 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்ததாம்.'சியான் 63' படத்தின் இயக்குனர் மாற்றம்? ஆனால் வீர தீர சூரன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் சியான் 63 படத்தின் தயாரிப்பாளர், விக்ரமிடம் சம்பளத்தை குறைக்கும்படி கேட்டுள்ளாராம். இதனால் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மடோன் அஸ்வின் சொன்ன கதையில் முதல் பாதி அருமையாக இருந்ததாகவும், இரண்டாம் பாதியில் விக்கிரமுக்கும், தயாரிப்பாளருக்கும் திருப்தி இல்லை என்பதாலும், இயக்குனரை வேறு கதை தயார் செய்து வருவதாக கூறியிருக்கிறார்கள். அவர் வேறு ஒரு நல்ல கதையை தயார் செய்து வந்தால் சியான் 63 படமானது மடோன் அஸ்வின் இயக்கத்தில் தொடங்குமாம். இல்லையென்றால் ஏற்கனவே தயாரிப்பாளர்களின் கைவசம் உள்ள இயக்குனர்களில் யாரேனும் ஒருவர் சியான் 63 படத்தை இயக்க வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ