சியான் விக்ரம், கவின் பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான விக்ரம், ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்திற்கு பிறகு அடுத்தடுத்த புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அதன்படி விக்ரமின் 63 வது படத்தை ‘மாவீரன்’ படத்தின் இயக்குனர் மடான் அஸ்வின் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் ’96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய வெற்றி படங்களின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம். இந்நிலையில் இவர் மற்றுமொரு புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது நடிகர் விக்ரம், விஷ்ணு எடாவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் எனவும் இதனை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல பாடலாசிரியரான விஷ்ணு எடாவன் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இது தவிர இவர், கவின் – நயன்தாரா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.