தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விக்ரம் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கோலார் தங்க சுரங்கம் தொடர்பான கதைக்களத்தில் தமிழர்கள் எப்படி அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்பதை எடுத்துரைக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
தங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம், தனது 62 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற S.U. அருண்குமார் இயக்க உள்ளார். தற்காலிகமாக சியான் 62 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு வீடியோவும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார் என்பதும் ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி சியான் 62 படத்தின் படப்பிடிப்பினை 2024 பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் எது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.