Homeசெய்திகள்சினிமாநடிகர் மதுரை மீசை மோகன் காலமானார்

நடிகர் மதுரை மீசை மோகன் காலமானார்

-

40 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பயணித்து வந்த நடிகர் மதுரை மோகன் இன்று காலை காலமானார்.

சுமார் 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல தரப்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன். ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனவர் மதுரை மோகன். இத்திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. மதுரையைச் சேர்ந்த மோகன், அங்கு அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சினிமாவின் மீது ஏற்பட்ட காதலால், திரைக்கு வந்தார்.

கும்பக்கரைத் தங்கய்யா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சீமராஜா’, ‘வீரன்’ முதலான பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலை இயக்கிய அழகர், இவரை சீரியல் பக்கமும் அழைத்துச் சென்றார். அண்மையில் சரவணன் இயக்கத்தில் வெளியான வீரன் திரைப்படத்தில் நடித்திருப்பார். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியலில் நடித்து வந்த அவர், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை காலமானார்.

இவருடைய மரணம் திரையுலகில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகர் காளி வெங்கட், மதுரை மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

MUST READ