- Advertisement -
காசோலை மோசடி வழக்கில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

கோலிவுட் சினிமாவில் பிரபலம் ஆனவர் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். இவர் நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கோலிவுட்டில் காதல் கோட்டை, வெற்றிக்கொடி கட்டு உள்பட முன்னணி நடிகர்கள் பலரின் திரைப்படங்களை இவர் தயாரித்து உள்ளார். இது தவிர தெலுங்கிலும் அவர் பல படங்களை தயாரித்து இருக்கிறார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த திரைப்படத்திற்காக அவர் ஒரு நிறுவனத்திடமிருந்து சுமார் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு காசோலை கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த காசோலை கணக்கில் பணம் இல்லாத காரணத்தால், திரும்பிவிட்டது.



