கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியானது. நவம்பர் 10ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா, இளவரசு, நிமிஷா விஜயன், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். சினிமாவில் நடிக்க ஆசைப்படும் ரவுடியாக ராகரா லாரன்ஸூம், இயக்குநராக எஸ்ஜே சூர்யாவும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமாகும்.
இத்திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றன. ஜப்பான் படத்தின் தோல்வியால், இப்படத்தின் முதல் நாள் வசூல் அடுத்தடுத்து அதிகரிக்கத் தொடங்கின. உலக அளவில் ஜிகர்தண்டா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியானது. பிரபல நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இப்படத்தில் சீசரான ராகவா, பிரபல ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனக்கு கொடுத்ததாக கூறி பழைய கேமரா ஒன்றை காட்டியிருப்பார். இதைக் கூறும் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டே நடித்தது போல்விஎஃப்எக்ஸ் செய்திருந்தனர். இந்நிலையில், ரசிகர் ஒருவர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் குறிப்பிட்டு, ஜிகர்தண்டா படத்தை பாருங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது, அந்த கணக்கிலிருந்து பதில் வந்துள்ளது. அதில், கிளிண்ட் அப்படத்தை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். இதை விரைவில் பார்க்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதைக் கண்ட கார்த்திக் சுப்பராஜ் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.