spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு! திரையுலகினர் அதிர்ச்சி! 

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு! திரையுலகினர் அதிர்ச்சி! 

-

- Advertisement -

பிரபல நடிகரான ரோபோ ஷங்கர் இன்று உடல்நலக்குறைவால் காலமான செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ரோபோ ஷங்கர் சிறுநீரக பிரச்சனை மற்றும் உணவு குழாய் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு தன்னுடைய மகள் இந்திரஜாவுக்கு மதுரையில்  திருமணம் செய்தார் ரோபோ சங்கர். அதுமட்டுமின்றி திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினர் கலந்துகொண்டனர்.

we-r-hiring

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு! திரையுலகினர் அதிர்ச்சி! விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன் திறமையை நிரூபித்து வெள்ளித்திரைக்கு வந்தவர். தனது அபாரமான மிமிக்ரி திறமை மூலம் தொலைகாட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். மேடைகளில் ரோபோ போல இவர் ஆடும் நடனத்தின் மூலம் இவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர் வந்தது.

விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாலகுமாரா படத்தில் முழுநீள கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது. பின்னர் தொடர்ந்து ’கப்பல்’, ‘மாரி’, ’வாயை மூடி பேசவும்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

பெரிய திரை, சின்னத்திரை என பிஸியாக பணி புரிந்து வந்த சமயத்தில், ஒரு ஆண்டுக்கு முன்பு அவருக்கு மஞ்சகாமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், உடல் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டார். அதன்பின் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டு மஞ்ச காமாலையிலிருந்து மீண்டு வந்துள்ளார் ரோபோ சங்கர். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதே போல அவரது அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் காட்ஸ்ஜில்லா (GodsJilla) என்ற படத்தின் பூஜையில் ரோபோ சங்கர் கலந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் துரைப்பாக்கம் அருகே நடைபெற்ற அந்தப் படத்தின் படப்பிடிப்பில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு நடித்து வந்தார்.

அப்போது ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ரோபோ சங்கரை படக் குழுவினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர், வரும் நவம்பர் மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட  திட்டமிட்டிருந்தார்.   ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. நாளை இறுதி சடங்கு நடக்கிறது.

அவரது மறைவுக்கு  தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரவித்து உள்ளனர்.

 

MUST READ