சமீபத்தில் காரைக்குடியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கண்டனத்துக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது.’இப்படித்தான் உருவானேன்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பழ கருப்பையா எழுதிய இந்த நூலின் வெளியீட்டு விழா காரைக்குடியில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு முடிவுரையில் நடிகர் சிவக்குமார் மேடையில் பேசினார்.
அப்போது வயதான நபர் ஒருவர் சிவகுமாருக்கு சால்வை அணிவிக்க வந்தார். அந்த சால்வையை சிவக்குமார் எடுத்து வீசி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. சிவக்குமாரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
காரைக்குடி நிகழ்ச்சியில் #சிவகுமார் சால்வை தூக்கி எறிந்த நிகழ்வுக்கு அவரது விளக்கம்#Sivakumar #Karaikudi pic.twitter.com/jnxpyS5q0D
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) February 27, 2024
அந்த வீடியோவில் நடிகர் சிவகுமாருடன் இணைந்து சால்வை போற்றிய அந்த முதியவரும் இருந்தார். அதில் சிவக்குமார் பேசி இருப்பதாவது, அந்த முதியவர் தன்னுடைய நெடுங்கால நண்பர் தான். தம்பி போன்றவர், எனக்கு சால்வை அணிவது சுத்தமாக பிடிக்காது என்பதை அவர் நன்கு அறிவார். எனக்கு சால்வை பொருத்தக் கூடாது என்பதை அவருடைய மனைவியும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இருந்தும் கூட அவர் சால்வை அணிவித்துள்ளார். இந்த நிலையில் பொது மேடையில் நானும் அவ்வாறு நடந்திருக்கக் கூடாது. இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


