Homeசெய்திகள்சினிமாநகைச்சுவையில் கலக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன்

நகைச்சுவையில் கலக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன்

-

- Advertisement -
நகைச்சுவை நாயகனாக நடித்து வந்த சதீஷ் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சதீஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் கான்ஜூரிங் கண்ணப்பன். அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. படத்தில் சதீஷ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

உறங்கும் போதெல்லாம் தனது கனவில் ஒரு பேய் பங்களாவில் சிக்கிக் கொள்கிறார். கதாநாயகன் சதீஸ் மட்டும் சிக்கிக்கொண்டது மட்டுமல்லாமல் அவரது தாய், தந்தை, மாமா உள்ளிட்டோரும் Dream catcher-ல் இருந்து ரெக்கையை பிடிங்கி கனவு உலகில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பது தான் கதை. நடிப்பு, சீரியஸ் என அனைத்து பக்கங்களிலும் தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தி உள்ளார் சதீஸ். பல இடங்களில் படம் விறுவிறுப்பாக சென்றாலும், சில இடங்களில் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது. இருப்பினும், நகைச்சுவையில் படத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் கலக்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ