கூலி பட நடிகர் ஜெயிலர் 2 படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் இந்த படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர். மேலும் மோகன்லால், சிவராஜ்குமார், நந்தமுரி பாலகிருஷ்ணா, ஷாருக்கான், எஸ்.ஜே. சூர்யா, சந்தானம் என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது. இந்நிலையில் ரஜினியுடன் இணைந்து கூலி திரைப்படத்தில் நடித்திருந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, ஜெயிலர் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரஜினியின் கூலி திரைப்படம் 2025 ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.