கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியிட பட குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் நடிகர் ரஜினி, ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். நடிகர் ரஜினி இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடித்து வருகிறார். படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நாளையுடன் (ஆகஸ்ட் 10) முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக வைஷாகில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் ஐதராபாத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.