spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீம் கிரியேட்டர்களுக்கு நன்றி.... 'கூலி' பட வில்லி வெளியிட்ட பதிவு வைரல்!

மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி…. ‘கூலி’ பட வில்லி வெளியிட்ட பதிவு வைரல்!

-

- Advertisement -

‘கூலி’ பட வில்லி ரச்சிதா ராம் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி.... 'கூலி' பட வில்லி வெளியிட்ட பதிவு வைரல்!

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி வருகிறது. அதன்படி இப்படம் தற்போது வரை ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படத்தில் சௌபின் சாகிர் மற்றும் ரச்சிதா ராமின் கதாபாத்திரங்கள் பலரையும் வியப்படையை வைத்தது. அதிலும் கன்னட சினிமாவில் கதாநாயகியாக வலம் வரும் ரச்சிதா ராம் தமிழில் வில்லியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ‘கூலி’ படத்தில் அவருடைய கல்யாணி கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் ரச்சிதா ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by R R (@rachita_instaofficial)

we-r-hiring

அந்த பதிவில், “கூலி படத்தில் நான் நடித்திருந்த கல்யாணி கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு நம்ப முடியாத அளவுக்கு அருமையாக இருந்தது. விமர்சனங்கள் மற்றும் என்னுடைய கேரக்டருக்கு கிடைத்த அன்பால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஊடக விமர்சகர்கள், ட்ரோல் மற்றும் மீம் கிரியேட்டர்கள் ஆகியோர்களுக்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு சிறப்பு நன்றி. மறக்க முடியாத அனுபவம். ‘கூலி’ பட வெற்றிக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ