டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் மாமன் ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.நேற்று (மே 16) சந்தானம் நடிப்பில் உருவாகியிருந்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெளியானது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் கௌதம் மேனன் – யாஷிகாவின் காதல் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது தவிர சந்தானம் வழக்கம்போல் டைமிங் காமெடியில் கலக்கியுள்ளார். மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் தனக்கான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.
அதேசமயம் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த மாமன் எனும் திரைப்படமும் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பிரசாந்த் பாண்டியராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். தாய்மாமனுக்கு – மருமகனுக்கும் இடையிலான பாசப்பணிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் மாமன் திரைப்படம் முதல் நாளில் ரூ. 1.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது எனவும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் முதல் நாளில் ரூ. 2.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை என்பதால் அனைவரும் நாட்களிலும் இந்த இரண்டு படங்களின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.