spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கேம் சேஞ்சர்' ப்ரீ ரிலீஸ் விழா.... துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அழைப்பு!

‘கேம் சேஞ்சர்’ ப்ரீ ரிலீஸ் விழா…. துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அழைப்பு!

-

- Advertisement -

கேம் சேஞ்சர் படத்தின் பிரீ ரிலீஸ் விழாவிற்கு துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.'கேம் சேஞ்சர்' ப்ரீ ரிலீஸ் விழா.... துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அழைப்பு!

ராம்சரண் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. 'கேம் சேஞ்சர்' ப்ரீ ரிலீஸ் விழா.... துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அழைப்பு!அதன்படி இந்த படத்தில் இருந்து டீசரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவிற்கு பிரபல நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, பவன் கல்யாணை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 'கேம் சேஞ்சர்' ப்ரீ ரிலீஸ் விழா.... துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அழைப்பு!மேலும் வருகின்ற புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் வெளியாகும் என தயாரிப்பாளர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பிருந்தாவன் காலனியில் நடிகர் ராம் சரணுக்கு 256அடி கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ