spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇவரை இயக்க ஆசை... மேடையில் தன் விருப்பத்தை வெளிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்!

இவரை இயக்க ஆசை… மேடையில் தன் விருப்பத்தை வெளிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் கைதி படத்தின் மூலம் டாப் இயக்குனர்களில் முக்கிய இடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர், உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம், மீண்டும் தளபதியை வைத்து லியோ என இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் வசூலில் மைல்கல்லாக மாறின. அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படத்தையும் லோகேஷ் இயக்க உள்ளார். இவரை இயக்க ஆசை... மேடையில் தன் விருப்பத்தை வெளிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்!இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியாக உள்ள பார்க்கிங் திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் லோகேஷ் கனகராஜ் “எனக்கு நடிகர் எம் எஸ் பாஸ்கரை இயக்க வேண்டும் என ஆசை இருக்கிறது” என்றும் “கார் பார்க் செய்யப் போகும் விவகாரத்தில் இரு நபர்களுக்கு இடையே எழும் ஈகோ கிளாஸ் எப்படி ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது என்பதை பார்க்கிங் படம் மூலம் நீங்கள் பார்ப்பீர்கள்” என்றும் லோகேஷ் கனகராஜ் இப்படம் பற்றி பேசினார்.

எம் எஸ் பாஸ்கர் ஒரு மிகச் சிறந்த நடிகர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தக் கூடியவர். இவர் ஒரு சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. இவருடைய குரல்தான் எனத் தெரியாமலேயே பல ஹாலிவுட் படங்களின் டப்பிங் நாம் ரசித்துப் பார்த்திருக்கிறோம்.இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் ஆசையைக் கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்த எம் எஸ் பாஸ்கர் லோகேஷை வெகுவாக மகிழ்ச்சியுடன் பாராட்டினார் . இவரை இயக்க ஆசை... மேடையில் தன் விருப்பத்தை வெளிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்!லோகேஷ் பற்றி அவர் கூறியதாவது”லோகேஷ் நீங்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் நிச்சயமாக சினிமாவில் மேலும் மேலும் ஒரு நல்ல இடத்திற்கு வருவீர்கள். பெரும் கலைஞன் கமலஹாசனை இயக்கி விட்டீர்கள், விஜயை இயக்கி விட்டீர்கள் இத்தகைய திறமையான உங்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். எனக்கு நிச்சயமாக நீங்கள் வாய்ப்பு தர வேண்டும்” என்று மேடையில் லோகேஷிடம் கூறியுள்ளார்.

MUST READ