தேவரா படத்திலிருந்து முதல் பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு…
- Advertisement -
தேவரா படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகின் முடி சூடா மன்னராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம ஆர்.ஆர்.ஆர். ராஜமௌலி இயக்கிய இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பட்டையை கிளப்பியது. அதுமட்டுமன்றி ஆஸ்கர், கோல்டன் குளோப் என பெரும் பிரம்மாண்ட மற்றும் மதிப்பிற்குரிய அனைத்து விருதுகளையும் வென்றது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் மற்று் ராம்சரண் நடிக்கும் அடுத்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரட்ட சிவாவுடன் தேவரா என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். அத்துடன் பிரபல பாலிவுட் நடிகர் சாயிஃப் அலிகான் இதில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

இந்நிலையில், முதல்பாடல் குறித்த அப்டேட் வௌியாகி உள்ளது. அதன்படி வரும் 19-ம் தேதி முதல் பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்பாடலில் அனிருத்தும் இடம்பெறுவாராம். தேவரா திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தாமதமானதால், படத்தின் வெளியீடும் தள்ளிப்போகியுள்ளது.