ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
ஜூனியர் என்டிஆர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று பல விருதுகளையும் அள்ளியது. அடுத்ததாக ஜூனியர் என்டிஆர், கொரட்டலா சிவா இயக்கத்தில் தேவரா எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை யுவசுதா நிறுவனமும் நந்தமுரி தரகா ராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில் இப்படமானது வருகின்ற செப்டம்பர் 27 அன்று தமிழ், தெலுங்கு மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவும் அதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் பத்தவைக்கும் எனும் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் இந்த பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் நிலையில் தீப்தி சுரேஷ் பாடியுள்ளார்.