நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடாமுயற்சியின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இதற்கிடையில் நடிகர் அஜித் தனது 63 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதன்படி தற்காலிகமாக ஏகே 63 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தின் பூஜை சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கிறதாம். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் டோலிவுட் பிரபலம் ஒருவர் இணையுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதன் கூடுதல் தகவலாக ஏகே 63 படத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் ஏற்கனவே , கடந்த 2014 இல் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் தேவி ஸ்ரீ பிரசாத் சூர்யாவின் கங்குவா படத்திற்கும், விஷாலின் ரத்னம் படத்திற்கும் இசையமைக்கிறார். அடுத்ததாக தனுஷின் D51 படத்திலும் இசையமைக்க இருக்கிறார்.


