Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் அனிருத்துக்கு பதிலாக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம்

தெலுங்கில் அனிருத்துக்கு பதிலாக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம்

-

அனிருத், தமிழ் திரை உலகின் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வருபவர். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சூப்பர் ஹிட் ஆகும் பெரும்பாலான பாடல்களில் அனிருத்தின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் வேலையில்லா பட்டதாரி , கத்தி, நானும் ரௌடி தான் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்து பெற்றிருக்கிறார். அதே சமயம் சிறந்த பாடகாருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தற்போது இசை அமைத்து வருகிறார். பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமான அனிருத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அதேபோல, தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீ பிரசாத். தமிழில் சிங்கம், வில்லு உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள அவர் தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் நாகசைதன்யா நடிக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசை அமைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

MUST READ