
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கிய படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சிறிய இடைவெளி கூட இல்லாமல் தனுஷ் தனது 51வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். D51 படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் உள்ள யாதகிரி குட்டா பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான அறிவிப்பை பட குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தற்போது தனுஷின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்த காட்சிகள் படமாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. நாகார்ஜுனா தமிழில் ரட்சகன், தோழா உள்ளிட்ட பல பாடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் உடன் நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் இந்த புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்தது வருகிறது. மேலும் சேகர் கம்முலா இயக்கும் தனுஷ் 51 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


