spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து..... மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து….. மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

-

- Advertisement -

திரையுலகில் அடுத்தடுத்து வெளியாகும் விவாகரத்து தகவல்கள் ரசிகர்களுக்கும் மற்ற திரைப்பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து..... மகன்கள் யாருடன் இருப்பார்கள்?கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமண வாழ்க்கை தொடங்கியது. அதை தொடர்ந்து சுமூகமாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் திடீரென பூகம்பம் வெடிக்க இருவருமே 2022 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ தொடங்கினர். அதேசமயம் நீதிமன்றத்திலும் கடந்த 2004 இல் நடைபெற்ற தங்களின் திருமணம் செல்லாது என பரஸ்பர விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு பலமுறை விசாரணைக்கு வந்த நிலையில் இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாத போது தனுஷுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் விவாகரத்தில் உடன்பாடில்லை எனவும் இருவரும் மீண்டும் தங்களின் திருமண வாழ்க்கையை தொடங்க இருக்கின்றனர் எனவும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் செய்திகளை பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்து வந்தனர். ஆனால் இருவருமே தங்களின் விவாகரத்தில் உறுதியாக இருந்ததனால் சமீபத்தில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பும் வழங்கப்பட்டது. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து..... மகன்கள் யாருடன் இருப்பார்கள்?இந்நிலையில் தனுஷ்- ஐஸ்வர்யாவின் விவாகரத்திற்கு பிறகு அவர்களின் குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்களும் யாருடன் இருப்பார்கள் என்பது குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது கடந்த இரண்டு வருடங்களாகவே கோ- பேரண்டிங் முறையில் தான் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்களின் குழந்தைகளை கவனித்து வந்தனர். எனவே இனிவரும் காலங்களிலும் அதுபோலவே குழந்தைகளை வளர்ப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

MUST READ