நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர இன்னும் பல இயக்குனர்களிடம் கூட்டணி அமைக்க இருக்கிறார்.
அதே சமயம் நடிகை மமிதா பைஜு, மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டவர். இவர் தற்போது தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் ஜனநாயகன், இரண்டு வானம், டியூட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள இவர் சூர்யா 46 திரைப்படத்திலும் நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் -மமிதா பைஜு ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். அதாவது தனுஷுக்கு ஜோடியாக மமிதா நடிக்க உள்ளாராம். இந்த படத்தை போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க இருப்பதாகவும் இதனை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. எனவே படக்குழுவினர் சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.