Homeசெய்திகள்சினிமாதனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.... ரிலீஸ் எப்போது?

தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’…. ரிலீஸ் எப்போது?

-

தனுஷ் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.... ரிலீஸ் எப்போது?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகர் மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகள் உடையவர். அதேசமயம் கடந்த 2017-இல் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் கூட்டணியில் வெளியான பவர் பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் உருவெடுத்தார் தனுஷ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தனது 50வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதே சமயம் இவர் மூன்றாவதாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் பவிஷ் மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் இணைந்து மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.... ரிலீஸ் எப்போது?ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படமானது 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ