நடிகர் தனுஷ் தற்போது தனது 52 ஆவது படமான இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்துள்ளார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த இசை வெளியீட்டு விழாவில் ‘இட்லி கடை’ என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் கதையை கூறியிருந்தார் தனுஷ். அதன்படி இவர், சிறுவயதில் இட்லி வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் அதிகாலை 4 மணி முதல் பூப்பறித்து அதில் கிடைக்கும் 2 ரூபாயை வைத்து 4 இட்லி சாப்பிடுவேன் என்று கூறியிருந்தார். இது பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது.
ஏனென்றால் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா ஒரு இயக்குனராக இருந்த நிலையில் அவர் எப்படி இட்லி வாங்குவதற்கு கூட கஷ்டப்பட்டிருப்பார்? என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார். “நான் 1983-இல் பிறந்தேன். என் அப்பா 1991-இல் தான் இயக்குனரானார். 1995-இல் தான் எங்களுக்கு நல்ல வாழ்க்கை முறை கிடைத்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் 4 குழந்தைகளையும் வளர்க்க என்னுடைய அப்பா மிகவும் கஷ்டப்பட்டார். அதனால் சிறுவயதில் அவருடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு நான் வீட்டில் காசு கேட்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -