spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள நடிகர் தனுஷுக்கு அழைப்பு!

கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள நடிகர் தனுஷுக்கு அழைப்பு!

-

- Advertisement -

கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள நடிகர் தனுஷுக்கு அழைப்பு!மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பை நினைவு கூறும் வகையில் கலைஞர் 100 விழா வரும் ஜனவரி 6 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கலைஞர் பிறந்து நூறாவது ஆண்டு என்பதால் இந்த ஆண்டு முழுவதையும் சிறப்பாக கொண்டாட திமுக சார்பில் ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக இந்த விழா அமையவுள்ளது. பல திரைத் துறை பிரபலங்களும் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள், பெப்சி சங்க உறுப்பினர்கள், நடிகர் சங்க உறுப்பினர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து இவ்விழாவை முன்னெடுக்கின்றனர்.

அந்த வகையில் நடிகர் தனுஷுக்கு விழா நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், லிங்குசாமி உட்பட பல நிர்வாகிகள் தனுஷை நேரில் சந்தித்து விழாவிற்கு வருகை தரும்படி அழைத்துள்ளனர்.கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள நடிகர் தனுஷுக்கு அழைப்பு!

we-r-hiring

ஏற்கனவே ரஜினி, கமல் ஆகியோர் விழாவிற்கு வருவதை உறுதி செய்துள்ளனர். முன்னதாக டிசம்பர் 24ஆம் தேதி இவ்விழா நடத்த திட்டமிடப்பட்டு பின்னர் சில காரணங்களால் ஜனவரி 6 அன்று நடத்தப்படவுள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இவ்விழா நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான ஏற்பாடுகளை செய்யும் வகையில் வரும் ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்படவுள்ளன.

MUST READ