தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார்.
இவருடைய இயக்கத்திலும் நடிப்பிலும் தற்போது இட்லி கடை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 14) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் தனுஷ், ஹேட்டர்ஸ் குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அதாவது இதற்கு முன்பாக நடிகர் தனுஷ், குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹேட்டர்ஸ் குறித்து பேசிய விஷயங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. அதே சமயம் தனுஷை பலரும் விமர்சித்து வந்தனர். ஆகையினால் இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் என்ன பேசப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.
அதன்படி தனுஷ் நேற்று, ” ஹேட்டர்ஸ் என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஒரு சிலர் ஏதோ ஒரு காரணத்திற்காக வெறுப்புகளை பரப்புவார்கள். ஆனால் அவர்களும் அனைவரின் படங்களையும் பார்ப்பவர்களாக தான் இருப்பார்கள். அவங்க அன்பு கொடுத்தா நாமளும் அன்பு கொடுப்போம். அன்புவின் எழுச்சி தான் எல்லாமே” என்று பேசியிருந்தார். இருப்பினும் இன்னும் சிலர் தனுஷ் மீது வெறுப்பைக் காட்டி வருகின்றனர். ஏனென்றால் நேற்று தனுஷ், “சிறுவயதில் எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும். அந்த இட்லி கடையில் இட்லி சாப்பிட வேண்டும் என்பதற்காக அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து வயலில் இறங்கி பூப்பறிக்க செல்வோம். இரண்டரை மணி நேரம் பூப்பறித்தால் இரண்டு ரூபாய் கிடைக்கும். அதை வைத்து நான்கு இட்லி சாப்பிடுவோம். அப்படி உழைத்து சாப்பிடும்போது கிடைக்கும் சுவையும், மகிழ்ச்சியும், நிம்மதியும் பெரிய ஓட்டல்களில் கூட கிடைப்பதில்லை. எனவே இந்த இட்லி கடையை வைத்து ஏன் ஒரு படம் எடுக்க கூடாது என்று தோன்றியது. வெறும் இட்லி கடை மட்டுமில்லாமல் அந்த கிராமத்தில் என் மனதை பாதித்த ஒரு சில உண்மை கதாபாத்திரங்களையும் வைத்து எழுதப்பட்ட கற்பனை கதை தான் இந்த இட்லி கடை படம்” என்று தெரிவித்திருந்தார்.
Didn’t expect this much hatred for #Dhanush at #IdliKadai AL. Whatever he spoke on recent films Audio Launches its been criticized
Here is what Dir Vishu spoke about KasturiRaja who is his AD. And shares about the early family situation of Dhanush !!pic.twitter.com/NBQzQ2ABt1 https://t.co/1qjNIqUjtE
— AmuthaBharathi (@CinemaWithAB) September 15, 2025
தனுஷ் இவ்வாறு பேசியிருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தாலும், சிலர் தனுஷின் தந்தை இயக்குனராக இருந்தபோது இவர் எப்படி இட்லி வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் இருந்திருப்பார்? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷின் ரசிகர்கள் இயக்குனர் விசு பேசிய பழைய வீடியோ ஒன்றை தற்போது வைரலாக்கி வருகின்றனர். அதாவது அந்த வீடியோவில் இயக்குனர் விசு, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய போது, சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்போது அவருடைய வீட்டில் டிவி கூட இல்லை என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும், தனுஷை வெறுப்பவர்களுக்கு யாருக்கும் உண்மைகள் தெரியாது. அவர்கள் வேண்டுமென்றே எதிர்மறையை பரப்புகிறார்கள் என்று தனுஷுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது வருகின்றனர்.


