spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் பட ஹீரோயின் மாற்றம்..... குழப்பத்தில் ரசிகர்கள்!

தனுஷ் பட ஹீரோயின் மாற்றம்….. குழப்பத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

தனுஷ் படத்தின் ஹீரோயின் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தனுஷ் பட ஹீரோயின் மாற்றம்..... குழப்பத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இட்லி கடை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் தனுஷ். இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் இவர், இன்னும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் – அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவிடமும் கதை கேட்டிருந்தார். தனுஷ் பட ஹீரோயின் மாற்றம்..... குழப்பத்தில் ரசிகர்கள்!எனவே தனுஷ் – தமிழரசன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்றும் இதனை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகை கயடு லோஹர் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தனுஷ் பட ஹீரோயின் மாற்றம்..... குழப்பத்தில் ரசிகர்கள்!

we-r-hiring

அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷ், போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்திலும் கயடு லோஹர் தான் ஒப்பந்தமாகியுள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தில் மமிதா பைஜூ கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கயடு லோஹர் கமிட் ஆகியுள்ளார் என்று வெளியாகி உள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் எந்த படத்தில் எந்த நடிகை நடிக்கப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ