நடிகர் தனுஷ், நாகார்ஜுனா குறித்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது இயக்கம், நடிப்பு என பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது தனுஷின் 51வது படமாகும். இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. எனவே வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வரும் முழு விச்சில் தயாராகி வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், முதல் பாடலும், டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவரந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகர், தனுஷ் நாகார்ஜுனா குறித்து பேசி உள்ளார். அதன்படி, “நாகார்ஜுனா சாரின் படங்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பப்பட்டு நினைவு கூறப்படுகின்றன. நான் எப்போதும் அவருடைய பெரிய ரசிகன். குறிப்பாக தமிழில் அவரது நடிப்பில் வெளியான ரட்சகன் படத்தை நான் மிகவும் ரசித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -