தனுஷின் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடிப்பில் கடைசியாக ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியானது. அடுத்தது வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ராஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில் இவர்களது கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதற்கிடையில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி வரும் தனுஷ், ‘போர் தொழில்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.
#Dhanush completed #D54 shoot and arrived in Mumbai for #TereIshkMein promotions..🔥 A Round-The-Clock Hardworker..👌
pic.twitter.com/KlpEi8phKs— Laxmi Kanth (@iammoviebuff007) November 11, 2025

இந்நிலையில் தனுஷ், ‘D54’ படத்தை முடித்துவிட்டு ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக மும்பை வந்து இறங்கியுள்ளார். அந்த வகையில் மும்பை விமான நிலையத்தில் ஃபுல் எனர்ஜியுடன் நடந்து வரும் தனுஷை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் சினிமாவிற்காக நொடிமுள்ளாய் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ் குறித்து, 24 மணி நேரமும் உழைக்கும் உழைப்பாளி என்று தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


