நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது 50வது படமான ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. அந்த வகையில் இந்த படமானது மாஸான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
The most awaited #Raayan update today at 6 PM 🔥@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan @omdop @editor_prasanna @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah… pic.twitter.com/8fEMZIJP1W
— Sun Pictures (@sunpictures) May 6, 2024
இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆகவே இது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த படமானது ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கின்றன. எனவே இது என்ன அப்டேட்டாக இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.