தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் தனுஷின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியிருந்த திரைப்படம் தான் ராயன். இந்த படம் கடந்த ஜூலை 26 அன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. வன்முறை காட்சிகள் நிறைந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதேசமயம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வரும் இந்த படம் கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் (ஆகஸ்ட் 19) 25 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த படத்தில் தனுஷ், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
- Advertisement -