spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் இயக்கிய 'இட்லி கடை' ஹிட்டா? ஃப்ளாப்பா?.... திரை விமர்சனம்!

தனுஷ் இயக்கிய ‘இட்லி கடை’ ஹிட்டா? ஃப்ளாப்பா?…. திரை விமர்சனம்!

-

- Advertisement -

தனுஷ் இயக்கிய இட்லி கடை படத்தின் திரைவிமர்சனம்.தனுஷ் இயக்கிய 'இட்லி கடை' ஹிட்டா? ஃப்ளாப்பா?.... திரை விமர்சனம்!

நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். அதை தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களையும் இயக்கினார். அடுத்தது இட்லி கடை எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்தது. எனவே ரசிகர்களும் இன்று (அக்டோபர் 1 இல்) வெளியாகி உள்ள இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று கண்டு களித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.தனுஷ் இயக்கிய 'இட்லி கடை' ஹிட்டா? ஃப்ளாப்பா?.... திரை விமர்சனம்!

we-r-hiring

சொந்த ஊரில் சின்னதாக ஒரு இட்லி கடை வைத்திருக்கும் ராஜ்கிரண் (சிவனேசன்) தனது கை பக்குவத்தால் அந்த ஊரிலேயே பெரிய அளவில் பிரபலமாகிறார். அவரைப் போன்று அவருடைய மகனும் ( முருகன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ்) சமையலில் ஆர்வம் உடையவர். எனவே வெளிநாடு வரை சென்று பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஆனால் தனுஷின் அப்பாவும், அம்மாவும் சொந்த ஊரை விட்டு வர விரும்பாதவர்கள். அப்படி ஊரை விட்டு வந்து விட்டால் இட்லி கடையை யார் பார்த்துக் கொள்வது என்று கவலைப்படுகின்றனர்.
தனுஷ் இயக்கிய 'இட்லி கடை' ஹிட்டா? ஃப்ளாப்பா?.... திரை விமர்சனம்!ஒரு கட்டத்தில் சிவனேசனின் மகன் முருகன் சொந்த ஊருக்கு திரும்பி வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் தன் தந்தையின் ஆசைப்படி இட்லி கடையை பொறுப்புடன் பார்த்துக் கொள்கிறாரா? இல்லையா? என்பதுதான் இட்லி கடை படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்துள்ள ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், சமுத்திரக்கனி ஆகியோர் தங்களின் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளனர். அதிலும் ராஜ்கிரண் வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.தனுஷ் இயக்கிய 'இட்லி கடை' ஹிட்டா? ஃப்ளாப்பா?.... திரை விமர்சனம்! அவருடைய மனைவியாக நடித்துள்ள கீதா கைலாசம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றுள்ளார். மேலும் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார் நித்யா மேனன். இது தவிர அருண் விஜயும் நெகட்டிவ் ரோலில் ஸ்கோர் செய்கிறார். அடுத்தது தனுஷின் நடிப்பை பற்றி சொல்லத் தேவையே இல்லை. அந்த அளவிற்கு தனுஷின் நடிப்பும், ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. தனுஷ் இயக்கிய 'இட்லி கடை' ஹிட்டா? ஃப்ளாப்பா?.... திரை விமர்சனம்!படத்தின் முதல் பாதி உணர்வுப்பூர்வமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் இடம்பெற்ற எமோஷனல் காட்சிகள் கொஞ்சம் ஓவராக தெரிவதால் சற்று சோர்வை தருகின்றன. இருப்பினும் இரண்டாம் பாதியில் உள்ள பாடல்கள் மனதில் நிற்கிறது. மொத்தத்தில் இட்லி கடை குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்து நல்ல ஒரு பீல் குட் கதையாக மக்களை சென்றடைந்துள்ளது.

MUST READ