தனுஷின் குபேரா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தனுஷின் 51வது படமாக குபேரா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். நிகேத் பொம்மி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வரும் நிலையில் படமானது வருகின்ற ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போதைய படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி டிரான்ஸ் ஆஃப் குபேரா என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த டீசரின் பின்னணியில் பாடல் ஒன்று ஒலிக்கப்படுகிறது. இப்படத்தின் கதை என்னவென்று கணிக்க முடியாத அளவிற்கு டீசர் கட் அமைந்திருக்கிறது. டீசரின் ஒவ்வொரு ஃபிரேமிலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் ரியாக்ஷன் எமோஷனலாக கனெக்ட் ஆகும் விதத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.