பாலிவுட்டில் வரவேற்பை பெற்ற தூம் சீரிஸ் படங்களின் அடுத்த பாகத்தை தொடங்க படக்குழு முடிவு செய்து, ரன்பீர் கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் ‘தூம்’ சீரிஸ். இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கிறது. அனைத்திலுமே அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா காவல் துறை அதிகாரிகளாக நடித்துள்ளனர். வில்லனாக முதல் பாகத்தில் ஜான் ஆபிரஹாம், இரண்டாம் பாகத்தில் ஹ்ரித்திக் ரோஷன், மூன்றாம் பாகத்தில் ஆமிர் கான் ஆகியோர் நடித்தனர். 2013-ம் ஆண்டு 3-ம் பாகம் வெளியானது. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘தூம்’ சீரிஸ் படங்களைத் தொடங்க யஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இரண்டு விதமான லுக்கில் நடிக்கும் சூர்யா!

இதில் வில்லனாக நடிக்க ரன்பீர் கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
அடுத்த ஆண்டு இறுதி அல்லது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளனர்.