Homeசெய்திகள்சினிமாவெற்றி நடைபோடும் 'வீர தீர சூரன்'.... இயக்குனருக்கு நன்றி தெரிவித்த துருவ் விக்ரம்!

வெற்றி நடைபோடும் ‘வீர தீர சூரன்’…. இயக்குனருக்கு நன்றி தெரிவித்த துருவ் விக்ரம்!

-

- Advertisement -

துருவ் விக்ரம் இயக்குனர் அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.வெற்றி நடைபோடும் 'வீர தீர சூரன்'.... இயக்குனருக்கு நன்றி தெரிவித்த துருவ் விக்ரம்!

கடந்த மார்ச் 27ஆம் தேதி விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வீர தீர சூரன் பாகம் 2. இந்த படத்தை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கி இருந்தார். ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். வெற்றி நடைபோடும் 'வீர தீர சூரன்'.... இயக்குனருக்கு நன்றி தெரிவித்த துருவ் விக்ரம்!இந்த படத்தில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா, சுராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் தற்போது வரை கிட்டத்தட்ட ரூ. 27 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dhruv (@dhruv.vikram)

முதல் பாகத்திற்கு முன்பாகவே இரண்டாம் பாகத்தை வெளியிட்ட இயக்குனர் அருண்குமாரின் புதிய முயற்சியும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இந்நிலையில் விக்ரமின் மகன் துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “விண்டேஜ் சியான், வீர தீர சூரன் படத்திற்காக அருண்குமாருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ