தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சீனு ராமசாமி. இவருடைய படங்கள் எதார்த்த நடையிலும் மண்வாசம் மற்றும் மனிதம் பேசும் படங்களாகவே இருக்கும். இவருடைய இயக்கத்தில் உருவாகி வெகு நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் “இடம் பொருள் ஏவல்“. இப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றன. இருப்பினும் சில காரணங்களால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நல்ல படைப்பாளர் என பெயர் எடுத்த இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவ்விற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால்தான் அவர் சினிமாவை விட்டு விலகியதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இடம் பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் சீனு ராமசாமி மனிஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் எனவும், அதற்கு சாட்சியமாக மனிஷாவின் போன் உரையாடல்கள் இருக்கின்றன என்பது போன்ற செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மனிஷா யாதவ் , பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இப்பிரச்சனைக்கு விளக்கம் அளித்துள்ள சீனு ராமசாமி தன் மீது எந்த தவறும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். பல ஆண்டுகள் சினிமாவில் நடித்து விட்ட காரணத்தினால் தான் அவர் சினிமாவை விட்டு விலகினார் என்றும் மீண்டும் கூட சினிமாவிற்கு திரும்பி நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் மனிஷா யாதவ் நடித்திருந்த ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ விழாவில் தனக்கு நன்றி கூட தெரிவித்தார் என்றும் சீனு ராமசாமி குறிப்பிட்டுள்ளார். சினிமா துறையில் பாலியல் புகார்கள் சமீப காலமாக தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மனிஷா யாதவ் – சீனு ராமசாமி குறித்த இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
- Advertisement -