- Advertisement -
இயக்குநர் அமீர் மகள் திருமண விழா மதுரையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது.

கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அமீர். இவர் பல படங்களில் நாயகனாக நடித்தும் இருக்கிறார். மதுரையைச் சேர்ந்த இயக்குநர், தமிழில் பல படங்களை இயக்கி இருக்கிறார். மௌனம் பேசியதே படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குநராக தடம் பதித்த அமீருக்கு முதல் படமே பெயர் சொல்லும் வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து ராம், பருத்தி வீரன் என அடுத்தடுத்து இயக்கிய படங்களும் கோலிவுட்டில் கொடி நாட்டின.


குறிப்பாக பருத்தி வீரன் திரைப்படம், தமிழ் திரையுலகில் ஒரு அடையாளமாக மாறி இருக்கிறது. இதையடுத்து ஆதிபகவன் படத்தை இயக்கிய அமீர் அடுத்து, பல ஆண்டுகளாக படம் இயக்கவில்லை. இதனிடையே, வட சென்னை, மாறன், உயிர் தமிழுக்கு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.



