spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதனால்தான் சிவகார்த்திகேயனை வைத்து 'மதராஸி' படம் பண்ணேன்......... ஏ.ஆர். முருகதாஸ்!

அதனால்தான் சிவகார்த்திகேயனை வைத்து ‘மதராஸி’ படம் பண்ணேன்……… ஏ.ஆர். முருகதாஸ்!

-

- Advertisement -

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், மதராஸி படத்தை சிவகார்த்திகேயனை வைத்து எடுத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.அதனால்தான் சிவகார்த்திகேயனை வைத்து 'மதராஸி' படம் பண்ணேன்......... ஏ.ஆர். முருகதாஸ்!தமிழ் சினிமாவில் தீனா, ரமணா, துப்பாக்கி, கத்தி போன்ற பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘மதராஸி’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர், பிஜு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதன்படி ஏற்கனவே படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள், டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ப்ரோமோஷன் ஒன்றில் கலந்து கொண்ட ஏ.ஆர். முருகதாஸ், ‘மதராஸி’ படத்தை சிவகார்த்திகேயனை வைத்து பண்ணதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதனால்தான் சிவகார்த்திகேயனை வைத்து 'மதராஸி' படம் பண்ணேன்......... ஏ.ஆர். முருகதாஸ்!அதன்படி அவர், “மதராஸி படத்தின் அந்த கேரக்டரை மட்டும் ஏழு, எட்டு வருடங்களுக்கு முன்பாக ஷாருக்கானிடம் சொன்னேன். முழு ஸ்கிரிப்ட்டையும் சொல்லவில்லை. அவர் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார். ஆனால் அதன் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். அதற்கு எனக்கு பதில் வரவே ரொம்ப தாமதமாகிவிட்டது. அதன் பிறகு அதைப் பற்றி பேசவே இல்லை விட்டுவிட்டேன். சிவகார்த்திகேயனை பொருத்தவரை உடல் நெகிழ்வு இருக்கும். அதனால் இதை பண்ணலாம் என்று முடிவு செய்தேன். அதன் பிறகு தான் அந்த ஸ்கிரிப்ட் டைப் டெவலப் செய்து இன்னும் சில விஷயங்களை சேர்த்து பண்ணேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ