spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இயக்குனர் மிஸ்கின் வேண்டுகோள்

சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இயக்குனர் மிஸ்கின் வேண்டுகோள்

-

- Advertisement -

சினிமாவுக்கு வரும் இளைஞர்கள் பராசக்தியை 100 முறை பார்த்திட வேண்டும் என திரைப்பட இயக்குனர் மிஸ்கின் வேண்டுகோள்

சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இயக்குனர் மிஸ்கின் வேண்டுகோள்திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு “திருநாட்டின் அரும் தலைவர் திசை மாற்றிய திரைக்கலைஞர்”என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி கொரட்டுரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரைப்பட இயக்குனர் மிஸ்கின், நடிகர் அஜய் ரத்தினம், நடிகை கோவை சரளா, பேராசிரியர் ஜெயவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலைஞரின் புகழை பாடினர்.

சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இயக்குனர் மிஸ்கின் வேண்டுகோள்இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமூவேல், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி கழக செயலாளர் டி.எஸ்.பி.ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஸ்கின்”கலைஞரின் மொழி வலியிலிருந்து வந்தது” என 260 புத்தகம் படித்துள்ளேன்.

we-r-hiring

25-வது தடவையாக பராசக்தி பார்த்தேன்.இந்திய திரைக்கதையில் 4 தூண்கள் எனப்படும்  1952 ட்ராமா உலகத்தில் பராசக்தி போன்று எந்த திரைக்கதையும் இல்லை.23 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.என்னால எழுத முடியவில்லை.1982ல் சென்சார் போட்டுள்ளனர்.திரைக்கதை இப்பொழுது எழுதுவது கடினமாக உள்ளது.சினிமாவுக்கு வரும் இளைஞர்கள் பராசக்தியை 100 முறை பார்த்திட வேண்டும்.பராசக்தி திரைக்கதையை மீண்டும் பிரிண்ட் செய்யவேண்டும்.”வாழவும்,திரைக்கதை எழுதவும் மனிதர்களுக்கான போராட்ட வாழ்வை வாழ கற்று கொடுத்த கலைஞருக்கு நன்றி” என தெரிவித்தார்.

சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இயக்குனர் மிஸ்கின் வேண்டுகோள்மேலும் இதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகரான கோவை சரளா அவர்கள் கலைஞருக்கு மூன்று பக்க கவிதை வாழ்த்து மடல் பாடினார்.அவரின் பேச்சு பார்ப்பவர்களுக்கு சிரிக்கும் விதமாகவும் மற்றும் கலைஞரை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைக்கும் விதமாகவும், இருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ