Homeசெய்திகள்சினிமாவிஜய் நடிச்சுக்கிட்டே தான் இருப்பாரு.... அது பெரிய லாஸ்.... இயக்குனர் மிஷ்கின் பேச்சு!

விஜய் நடிச்சுக்கிட்டே தான் இருப்பாரு…. அது பெரிய லாஸ்…. இயக்குனர் மிஷ்கின் பேச்சு!

-

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின், நடிகர் விஜய் குறித்து பேசி உள்ளார்.விஜய் நடிச்சுக்கிட்டே தான் இருப்பாரு.... அது பெரிய லாஸ்.... இயக்குனர் மிஷ்கின் பேச்சு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி விரைவில் படப்பிடிப்புகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தை முடித்த பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும், ஜனநாயகன் படம் தான் தன்னுடைய கடைசி படம் எனவும் ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜய் நடிச்சுக்கிட்டே தான் இருப்பாரு.... அது பெரிய லாஸ்.... இயக்குனர் மிஷ்கின் பேச்சு!விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அவர் சினிமாவை விட்டு விலகுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தான் விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் இன்று (ஏப்ரல் 18) ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் விஜய் திரைப்படம் எதுவும் வெளியாகாத நிலையில், இது போன்ற விஜயின் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. அந்த வகையில் சச்சின் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் விஜய் குறித்து பேசி உள்ளார். விஜய் நடிச்சுக்கிட்டே தான் இருப்பாரு.... அது பெரிய லாஸ்.... இயக்குனர் மிஷ்கின் பேச்சு!அதன்படி அவர், “நடிகர் விஜய் கலை துறையை விட்டுப் போக மாட்டார். அவர் நடித்துக் கொண்டே தான் இருப்பார் என்று நினைக்கிறேன். என்னை பொருத்தவரை அவர் அரசியலிலும் பணியாற்ற வேண்டும், சினிமாவிலும் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விஜய் சினிமாவை விட்டு போறது மிகப்பெரிய லாஸ். கமல், ரஜினி சினிமாவை விட்டுப் போனால் நம்மால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல் விஜய், அஜித் சினிமாவை விட்டு விலகினால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே விஜய் எப்போதுமே நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ