Homeசெய்திகள்சினிமாஇந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் 'கல்கி 2898AD - 2' .... இயக்குனர் கொடுத்த அப்டேட்!

இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் ‘கல்கி 2898AD – 2’ …. இயக்குனர் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

இயக்குனர் நாக் அஸ்வின், கல்கி 2898AD – 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் 'கல்கி 2898AD - 2' .... இயக்குனர் கொடுத்த அப்டேட்!

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி பிரபாஸ், தீபிகா படுகோன்,அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோரின் நடிப்பில் கல்கி 2898AD திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. கல்கி 2898AD முதல் பாகம் உருவாகும் போதே இப்படமானது இரண்டு பாகங்களாக உருவாகும் என சொல்லப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் 'கல்கி 2898AD - 2' .... இயக்குனர் கொடுத்த அப்டேட்!அதன்படி தற்போது கல்கி 2898AD – 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் நாக் அஸ்வின். முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் நாக் அஸ்வின், கல்கி 2898AD – 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் 'கல்கி 2898AD - 2' .... இயக்குனர் கொடுத்த அப்டேட்!அதில் அவர், “இந்த ஆண்டு இறுதியில் கல்கி 2898AD – 2 படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். நடிகர் பிரபாஸ் முதல் பாகத்தில் குறைவான நேரம் தோன்றியிருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அதிக நேரம் தோன்றுவார். ஏனென்றால் இந்த கதை கர்ணன் மற்றும் அஸ்வத்தாமா கதாபாத்திரங்களை மையமாக கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ